வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

சென்னை: வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது முதல் கணவரான நடிகர் ஆகாஷும் அவரது மகனும் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி தனது அப்பா மற்றும் அம்மாவின் திருமண நாளில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய யூட்யூப் சேனலுக்காக தன்னிடம் பணியாற்றிய பீட்டர் பால் என்பவரை வனிதா காதல் திருமணம் செய்து கொண்டார்.

அடிக்கடி லிப்லாக்

கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது இருவரும் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாகவும், அடுத்தடுத்து தான் வெளியிடும் வீடியோக்கள் அனைத்திலும் தனது கணவரை அழைத்து லிப் லாக் கொடுத்து வருகிறார் வனிதா. powered by Rubicon Project

திருமணம் ஆனவர்

வனிதாவின் மூன்றாவதாக திருமணம் செய்துள்ள பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர். அவருடைய முதல் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை பீட்டர் பால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

முதல் திருமணம்

இதனால் வனிதாவின் திருமணம் விவாதப் பொருளாகி உள்ளது. நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணம் ஆனவர். முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். அவர் மூலம் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர்.

மூன்று பிள்ளைகள்

இதனை தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அவர் மூலம் ஜெயந்திகா என்ற ஒரு பெண் குழந்தையை பெற்றார். முதல் கணவரன ஆகாஷுக்கு பிறந்த மகன் ஸ்ரீஹரி பெற்றோரின் விவாகரத்துக்கு பிறகு அப்பாவுடனே வசித்து வருகிறார்.

மிகுந்த மன உளைச்சல்

இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் மூத்த மகனுக்கு தற்போது 23 வயதாகிறது. இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் மகன் ஸ்ரீஹரி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது.

ஊர் அறிந்த விஷயம்
வனிதாவின் முதல் கணவரும் நடிகருமான ஆகாஷும் புழுங்கி போய் இருப்பதாக கூறப்படுகிறது. விவாகரத்துக்கு பிறகு அவர் யாரோ தாங்கள் யாரோ என்று இருந்து வந்தாலும் ஸ்ரீஹரியின் அம்மா வனிதா தான் என்பது ஊர் அறிந்த விஷயம்.

பட்டும் படாமல்..

இந்நிலையில் வனிதா திருமண செய்திகளால் இருவருமே இறுக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அப்பா மகன் இருவருமே எதிலும் பட்டும் படாமல் ஒதுங்கியுள்ளனராம். வெளியாட்களுடன் சரிவர பேசுவதில்லை. எதிலும் கலந்துகொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் வேதனை

தனது அம்மாவின் மூன்றாவது திருமணத்தால் ஸ்ரீஹரி சமூக வலைதளங்களின் பக்கம் கூட போவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதே நிலைதான் விஜயக்குமாரின் குடும்பத்திலும் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. வனிதாவுடன் குடும்பத்தினர் யாருக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றாலும்கூட அவரது திருமண செய்திகள் குடும்பத்தினரை வேதனையடைய செய்துள்ளதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.










லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

Comments (0)
Add Comment