அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு! (படங்கள்)

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று இரவு இவர்களுக்கு செய்யப்பட கொரோனா சோதனையில், கொரோனா உறுதியானது. ஆனால இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இரண்டு பேருக்கும் நேற்று இரவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் பாதிக்காமல் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு பேருமே கொரோனா அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை.

தற்போது

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதே நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

ஜெயா பச்சன்

அமிதாப் பச்சன் மனைவி மற்றும் எம்பி ஜெயா பச்சன் மட்டும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக்கவில்லை .அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால் இன்று மீண்டும் அவருக்கு சோதனை செய்ய இருக்கிறார்கள். அமிதாப் வீட்டில் தற்போது ஜெயா பச்சன் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

என்ன நிலை

இந்த நிலையில் அவர்கள் வீட்டில் இருக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டில் 10 பணியாளர்கள் வரை இருக்கிறார்கள். அவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது. இவர்கள் மூலம் அங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Comments (0)
Add Comment