நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. திமுக எம்எல்ஏவுக்கு 15 நாள் சிறைக் காவல்.. ஜெயிலில் அடைப்பு!! (படங்கள்)

திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த இதயவர்மன் 2018 இல் நடந்த இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் தாண்டவமூர்த்தி என்பவர் இணைந்து அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் பணியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு எம்எல்ஏ இதயவர்மன் வீடு அருகே இருக்கும் அரசு நிலத்தை இமயம்குமார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமாரின் பிளாட்டிற்கு செல்ல பொது வழி பாதை சற்று கோணலாக இருந்த காரணத்தினால் குமார் சில அரசியல்வாதிகளை பிடித்து அந்த பாதையை நேர் செய்ய முயன்றுள்ளார். பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பொது வழி சாலை போட முயன்றதால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திமுக எம்எல்ஏ இதயவர்மன் இதை தட்டிக்கேட்டு இருக்கிறார்.

இமயம்குமாரின் நில அபகரிப்பை தட்டிக்கேட்க எம்எல்ஏவின் அப்பா லட்சுமிபதி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். இமயம்குமார் ஆட்கள் லட்சுமிபதியை அரிவாளால் தாக்க வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு இருந்தவர்களை நோக்கி லட்சுமிபதி குருவிகளை சுடும் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் காரில் கண்ணாடியை குண்டு துளைத்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் காயமடைந்தார். இது தொடர்பாக இமயகுமார் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த தாண்டவமூர்த்தி போலீசில் புகார் அளித்தார்.

இந்த துப்பாக்கி சூடு காரணமாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீதும் அவரின் தந்தை லட்சுமிபதி மீது வழக்கு பதியப்பட்டது. . இவர்களுக்கு உதவியாக இருந்தவ மொத்தம் 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து இதயவர்மன் உள்பட 7 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்கள் அவைரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment