சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா!!

கான்பூர்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை மத்திய பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி துபே மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து உ.பி.க்கு நேற்று முன் தினம் காலை கொண்டு வரப்பட்டார்.

அப்போது கான்பூர் அருகே விகாஸ் துபேவை அழைத்து வந்த வாகனம் தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இருந்து துபே தப்பித்து ஓட முயன்றார். அப்போது போலீசார் மீது சரமாரியாக விகாஸ் துபே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து போலீசாரும் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 போலீசார் படுகாயமடைந்தனர். ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டார். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால் சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் உஜ்ஜைனியில் இருந்து விகாஸ் துபேவை அழைத்து வந்த, என்கவுண்ட்டரில் படுகாயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments (0)
Add Comment