ராஜாங்கனையின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை!!

கொரோனா தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட ராஜாங்கனை 1, 3 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை பகுதியில் இடம்பெற்ற இறந்த வீட்டின் மத நிகழ்வுகளின் போது உரியை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றியிருந்தால் இந்நிலமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment