வவுனியாவில் எரிபொருள் பதுக்கல்??

வவுனியாவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச், மே மாதங்களில் ஊரடங்கு சட்டத்தின் மூலம் இலங்கை தேசமே முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வாகனங்களுக்கான எரிபொருள் தாராளமாக நாட்டில் கிடைக்கப் பெற்றது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் நாட்டில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வதந்திகள் பரவி வரும் நிலையில் வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் என்ன நடக்குது என்றே புரியவில்லை கொரோனா காரணமாக ஒவ்வொருவரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. உலகளாவிய ரீதியில் கச்சாய் எண்ணைக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாத நிலையில் வவுனியாவில் எரிபொருள் தட்டுப்பாடு செயற்கையாய் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என எண்ணத்தோன்றுகின்றது என தெரிவித்தார்.

வவுனியாவில் அனேக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்படாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment