வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் பலி: மேலும் ஒருவர் காயம்!!

வவுனியா – கனகராயன்குளம் குறிசுட்ட குளம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவர் ஏ9 வீதி குறிசுட்ட குளம் சந்தியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வருகைதந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் புதூர் சந்தியை சேர்ந்த ஞானசேகரம் வயது 53 என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment