ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும்: மஹிந்த!!

இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய

கொரோனா தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வன்னிப் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவுகள் 14 நாட்களின் பின் இடம்பெறும். அப் பகுதியில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கு வாக்குப் பதிவு இடம்பெறும்.

அத்துடன், தேர்தல் திட்டமிட்டபடி ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக தேர்தலை பிற்போடுமாறு எம்மிடம் எந்தக் கட்சியும் கோரிக்கை முன்வைக்கவில்லை. அப்படி முன் வைக்கவும் தேவையில்லை. தேர்தல் உரிய திகதியில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment