பட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்!!

10 வயசு பையன்.. 10 லட்சம் ரூபாயை.. 30 செகண்ட்டில் எடுத்து கொண்டு அவன் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறான்.. பட்ட பகலில் பேங்கில் இப்படி ஒரு கொள்ளையை நடத்தியுள்ளான் சிறுவன்.. இந்த சிசிடிவியை பார்த்து போலீசார் வாயடைத்து போயுள்ளனர். மத்திய பிரதேசம், நிமூச் பகுதியில் உள்ள கோ- ஆப்பரேட் வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த வீடியோவில், காலை 11 மணி ஆகிறது.. கோ-ஆப்பரேட்டிவ் பேங்க் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

10 வயது சிறுவன் உள்ளே நுழைகிறான்.. அவன் டிரஸ் கிழிந்து காணப்படுகிறது.. பேங்க் கஸ்டமர்களில் கியூவில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பையன் நேராக கேஷியர் ரூம் போகிறான்.. அங்கிருந்த 10 லட்சம் ரூபாயை அசால்ட்டாக லவட்டி கொண்டு போகிறான்.. இத்தனை பேர் இருக்கிறார்களே, பட்டப்பகல், கேமிரா இருக்கிறதே என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல், அவன் பாட்டுக்கு பணத்தை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறுகிறான். கூட்டம் நிரம்பி கிடந்த அந்த பேங்கில்,கொள்ளை போனது உடனடியாக தெரியவில்லை… அதுவும் இல்லாமல் சிறுவன் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் எழவில்லை.. ஆனால் சிறுவன் வேகமாக வெளியே செல்லும் போது, திடீரென அலாரம் அடித்துவிட்டது.. எக்ஸிட் மிஷினில் அப்படி ஒரு சத்தம் வரவும் செக்யூரிட்டிகள் அலர்ட் ஆனார்கள்.. வேக வேகமாக சென்ற சிறுவனை மடக்கி பிடிக்க முயன்றனர்.. ஆனால் அவன் அதற்குள் ஓடிவிட்டான்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.. அவர்கள் விரைந்து வந்து சிசிடிவி கேமிரா காட்சியை ஆராயந்தபோதுதான், அவன் உள்ளே நுழைந்து வெளியே செல்வது வரை பதிவாகி உள்ளது… இந்த சிறுவன் குறித்து நிமுச் மாவட்ட எஸ்பி சொல்லும்போது, “அந்த 10 வயது பையன் ரொம்ப குள்ளமா இருந்தான்.. அவன் குட்டியாக இருக்கவும் யாருக்குமே தெரியவுமில்லை, அவனை கவனிக்கவுமில்லை, விரைவில் தேடி வருகிறோம்” என்றார்.

ஆனால் 10 வயது சிறுவன் எப்படி ஒரு பேங்கில் உள்ளே தைரியமாக நுழைய முடியும்? கேஷியர் ரூமில் இந்த இடத்தில்தான் பணம் உள்ளது என்று அவனுக்கு எப்படி தெரியும்? என்ற சந்தேகம் எழுகிறது.. அதனால் எப்படியும் பெரிய கொள்ளை கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இப்படித்தான் சிறுவர்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் தந்து பல கிரிமினல் வேலைகளில் ஈடுபடுத்துகிறார்களாம் சிலர்.. அவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.. 10 வயசு பையன் 10 லட்சத்தை முப்பதே செகண்டில் கொள்ளையடித்த இந்த சிசிடிவி காட்சி பலரும் பரபரபப்பை ஏற்படுத்தி வருகிறது.

Comments (0)
Add Comment