இளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில் கொடுமை! (படங்கள்)

ஒன்றல்ல, ரெண்டல்ல.. மொத்தம் 17 வருஷமாக, பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு மனைவியை வேவு பார்த்து வந்துள்ளார் கணவர்.. இந்த விசித்திர, விநோத சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் என்ற பகுதியில் வசித்து வரும் அந்த நபருக்கு வயது 45.. பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் இவர்.. 2002-ல் இவருக்கு கல்யாணமாகி உள்ளது.. அதற்கு முன்பு இவர்கள் 2 பேரும் நண்பர்களாம்.. பிறகுதான் விரும்பி கல்யாணம் செய்துள்ளனர். 2 குழந்தைகளும் உள்ளனர். 18 வருஷமாக மனைவியுடன் ஒன்றாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நிம்மதியாகவே வாழவில்லை.. கணவருக்கு மனைவி மீது சந்தேகம்.. சந்தேகம்.. சந்தேகம்.

சந்தேகம்

மனைவியின் நடத்தை பற்றி எந்நேரமும் இவருக்கு கவலையும், பயமும் இருந்து கொண்டே இருந்தது.. ஒருகட்டத்தால், மனைவியை வீட்டில் விட்டுவிட்டு நிம்மதியாக வேலைக்கு கூட இவரால் சென்று வர முடியவில்லை.. அதனால் வேலைக்கும் செல்லாமலேயே இருந்துள்ளார். ,இதை பற்றி டைம்ஸ்ஆப் இந்தியா விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

அலமாரி

மனைவிக்கு 38 வயசாகிறது.. பிரச்சனையே இவருக்கு இதுதான்.. மேலும் மனைவியை வேவு பார்க்க பீரோவுக்குள் போய் ஒளிந்து கொள்வாராம்.. அந்த அலமாரியில் உட்கார்ந்துகொண்டுதான் அவரை கண்காணிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டுள்ளார். இப்படியே 17 வருஷம் செய்து வந்துள்ளார். இதையெல்லாம் பார்த்து பார்த்து வெறுத்து போன மனைவி, போலீசில் புகார் சொல்லிவிட்டார்.

சிகிச்சை

17 வருஷமாக தன்னை கணவர் உளவு பார்ப்பதாகவும், வேலை வெட்டிக்கு போகாமல் இதே பொழப்பாக இருக்கிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.. அத்துடன் கணவர் ஒரு மன நோயாளி என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.. இவருக்கு ஒருமுறை சித்த பிரமை பிடித்துவிட்டதாம்.. அதற்கு சிகிச்சையும் தந்துள்ளனர்.. அப்போதெல்லாம் நல்லாதான் இருந்தாராம்.. பாசமாகதான் பேசினாராம்.. திடீரென்று சிகிச்சையை நிறுத்திவிடவும்தான், இப்படியெல்லாம் செய்கிறார் என்று மனைவி கூறியுள்ளார்.

சண்டை

அந்த பெண் இதை பற்றி சொல்லும்போது, “நான் எந்த ஆணுடனாவது உறவு வைத்திருப்பேனோ, இனிமேல் உறவு வைத்து கொண்டுவிடுவேனோ என்று அவருக்கு பயம் இருந்து கொண்டே இருக்கிறது.. இதுதான் முக்கியமான பிரச்சனையே.. இதை வைத்து நிறைய சண்டை வீட்டிலும் வெளியிலும் வந்துள்ளது.

பைத்தியம்

வீட்டுக்கு நியூஸ் பேப்பர் போட வருபவர், பால் பாக்கெட் போட வருபவருடன்கூட சண்டை போட்டு, அவர்களை கொடூரமாக அடித்துவிடுவார்.. சர்ச் குழு உறுப்பினர்களிடம் போய், என் மனைவிக்கு பைத்தியம்.. அவள் போன் பண்ணினால் நீங்க யாரும் போனை எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வருவார்.. இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.. என்னை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment