பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில் அட்டூழியம்!

பீகார்: தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பெண். அவரை ஒரு அங்கன்வாடி ஊழியரும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடி அடித்து உதைத்துள்ளனர். அங்கன்வாடி ஊழியரின் பெயர் லீலா தேவி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸில் தன்னைப் பற்றி அப்பெண் புகார் கொடுத்தது குறித்து ஆத்திரமடைந்தார் லீலா. உடனே தனது கணவர் மோத்தி மொஹதோ என்பவரிடம் இதுகுறித்துக் கூறினார். பின்னர் தனது ஆதரவு கிராமத்தினரை கூட்டிக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குப் போயுள்ளனர். அப்பெண்ணை இழுத்து வெளியே கொண்டு வந்து சரமாரியாக அடித்தனர்.

அத்தோடு விடவில்லை. அப்பெண்ணின் உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கினர். அந்தப் பெண் லீலா கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இதை சிலர் வீடியோவாக எடுக்க அது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி விட்டது. இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments (0)
Add Comment