12 வயசு பையன்.. டீச்சர் செய்த அட்டகாசம் அநியாயம்.. அடி வயிற்றில் வலி வந்து.. பரிதாப சிறுவன்!

12 வயசு பையனை மிக மிக கொடூரமாக ஒரு டீச்சர் பலாத்காரம் செய்துள்ளார்.. அந்த சிறுவனுக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போதுதான் டீச்சரின் எல்லா வண்டவாளமும் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு நாடு முழுவதும் கொரோனா உள்ளது.. தொற்று வேகமாக பரவி வருவதால், லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டபடியே உள்ளது.. அதனால் ஸ்கூல்கள் எதுவும் திறக்க முடியாத சூழல் இருப்பதால், ஆன்லைன் கிளாஸ்கள் நடந்து வருகின்றன.

ஒருசிலர், இந்த ஆன்லைன் கிளாஸ்கள் முடிந்த பிறகு, தனியார் ஆசிரியர்களை கொண்டும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறார்கள்.. அப்படி ஒருவர்தான் பாரத் பரோட் என்பவர்.. குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், தால்தேவ் தாலுகாவை சேர்ந்தவர்.. இவருக்கு 21 வயசாகிறது.. ஒரு சிறுவனுக்கு பாடம் நடத்துவதற்காக இந்த டீச்சரை பெற்றோர்கள் நியமித்துள்ளனர். இந்நிலையில், பாடம் படிக்கும் ஒரு சிறுவனுக்கு திடீரென வயிற்று வலி வந்துள்ளது..

ஒரு மாசமாக வயிறு வலி அதிகமாக இருந்துள்ளது.. ஒரு கட்டத்தில் வயிற்றை பிடித்து கொண்ட சிறுவன் அழவும், பதறி போன பெற்றோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர.. சாதாரண வயிற்று வலி என்று நினைத்து டாக்டர்களும் சிறுவனுக்கு மருந்து, மாத்திரைகள் தந்துள்ளனர். அப்போதும் வலி நிற்கவில்லை.. அதனால் சிறுவனிடமே டாக்டர்கள் இதை பற்றி விசாரித்தனர்.. அப்போதுதான் தன்னுடைய வாத்தியார் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினதை சொல்லி உள்ளார்.. இந்த விஷயத்தை வெளியே சொன்னால், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் மிரட்டி உள்ளார்.

இதற்கு பயந்தே சிறுவன் யாரிடமும் இதை சொல்லாமல் மறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து படிக்கும் மாணவனை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பாரத் பரோட் மீது இயற்கைக்கு மாறான செக்ஸ் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இதை பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment