அசாம் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு..!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பீகாரர், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
அங்குள்ள 21 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment