இரட்டை சகோதரிகள்.. ஒரே ஒரு காதலன்.. ஒரே நேரத்தில் கர்ப்பமாக ஆசை.. அதிரடியாக எடுத்த அடடே முடிவு!! (படங்கள்)

இப்படியும் நடக்குமா என்று வாய் பிளந்து நிற்காதீர்கள்.. இப்படியும் நடந்துச்சே என்று புதிய வரலாறு படைக்கப் போகிறார்கள் இந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்.

இரு சகோதரிகள். இருவருமே இரட்டையர்கள். ஒரே மாதிரியாக இருப்பார்கள். பெயர்கள் அன்னா மற்றும் லூசி.. இதில் யாரு அன்னா, யாரு லூசி என்று சட்டென கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.. ஆனால் இவர்களுக்கு ஒரு காதலர் இருக்கிறார்..

ஆமாங்க, இருவருக்குமே ஒரே காதலர்தான்.. அந்தக் கொடுத்து வச்ச மகாராசனோட பெயர்தான் பென் பைரன். இவருக்கு 39 வயதாகிறது. சகோதரிகளுக்கு 34 வயசு.

ஒரே காதலன்

கடந்த 9 வருடமாக இந்த மூன்று பேரும் காதலில் திளைத்துக் கொண்டுள்ளனர். சேர்ந்தேதான் திரிவார்களாம் 3 பேரும். டாய்லெட் போவதாக இருந்தால் கூட சேர்ந்துதான் போகுமாம் இந்த மூனும். அந்த அளவுக்கு விடாப்பிடியான வீரியமான காதலாக இருக்கிறது இது. ஆனால் இது நாள் வரை இவர்களுக்குள் ஒரு விஷயம் மட்டும் நடக்கவில்லை.

ஆசை

அதாவது எல்லாமே நடந்தும் கூட கர்ப்பமாகாமல் கவனமாக இருந்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அந்த ஆசையும் வந்து விட்டதாம். அதுவும் எப்படி தெரியுமா.. ஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பமாக வேண்டும். ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. காதலியரின் ஆசையை நிறைவேற்றுவதுதானே பென்னின் முதல் வேலை.. அவரும் ஓகே சொல்லி விட்டார். இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் 3 பேரும் இறங்கியுள்ளனர்.

சோதனை

குழாய் ஆனால் இவர்கள் எடுத்த முடிவுதான் வித்தியாசமானது. இயல்பான முறையில் உறவு கொண்டால் கர்ப்பம் தரிப்பது வேறுபடும், வேறு நேறு நாளில் பிரசவம் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வந்ததால், இருவரும் சோதனைக் குழாய் மூலம் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க முடிவெடுத்துள்ளனராம்.

லட்சியம்

இதுகுறித்து லூசி கூறுகையில், “நாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க ஆசைப்படுகிறோம். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம். சாகும்போதும் கூட சேர்ந்தே சாவோம். எனவே எங்களது பிள்ளைகளும் கூட ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க விரும்புகிறோம். இதற்காக சோதனைக் குழாய் முறை குறித்து பரிசீலித்து வருகிறோம் ” என்றார் லூசி.

குழந்தைகள்

அன்னா கூறுகையில், ” இது சவாலானதுதான். ஆனால் வாழ்க்கையில் எதுதான் சவால் இல்லை. எனவே இந்த சவாலையும் சந்திக்க முடிவு செய்துள்ளோம். என்றார் அன்னா. லூசி கூறுகையில், எங்களில் ஒருவருக்கு ஆணும், இன்னொருவருக்கு பெண்ணும் பிறந்தால் கூட நாங்கள் ஏமாற்றமடைவோம். இருவருக்கும் ஒரே மாதிரியான குழந்தைதான் தேவை. அதனால்தான் சோதனைக் குழாய் முறையை யோசிக்கிறோம் என்றார்.

படுக்கை

இவர்கள் வீடு செம கலகலப்பானது. காதலர் பென்னும் இவர்களுடன்தான் வசிக்கிறார். சகோதரிகளுடன் அவர்களது அம்மாவும் இருக்கிறார். இவர்களது பெட்ரூம் பெரியது, பெட்டும் பெரியது.. 3 பேருக்கு தாங்க வேண்டும் இல்லையா.. அதனால்தான் படுக்கையும் பெரிதாக வைத்துள்ளனர். சேர்ந்தே தூங்குகின்றனர். சேர்ந்துதான் எல்லாமுமாம்!

9 வருடங்கள்

ஆனால் என்னன்னா இவர்களுக்கு பென் முதல் காதலர் இல்லையாம். இதற்கு முன்பும் சிலர் இருந்தனராம். ஆனால் அவர்கள் இவர்களை பிரித்துப் பார்க்க முயன்றதால், கடுப்பாகி அவர்களை விரட்டி விட்டார்களாம். பென் மட்டும்தான் இருவரையும் அரவணைத்து ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். அவருடைய டீலிங் பிடித்துப் போனதால்தான் 9 வருடமாக பென் மட்டுமே தொடர்கிறாராம்!

முத்தம் முதல் முறை சந்தித்தபோது இருவருக்கும் பென் ஒரே சமயத்தில் முத்தம் கொடுத்தாராம். அவர்கள் போன் செய்தால் கூட அடுத்தவருக்குத் தெரியும் வகையில்தான் பேசிக் கொள்வார்களாம். பிரியவே மாட்டார்களாம். இந்த இறவில் யாருக்கும் எந்தப் பொறாமையும் வந்ததில்லையாம். இரு சகோதரிகளையும் பென் அப்படி சிறப்பாக கவனித்துக் கொள்கிறாராம். யாருக்கும் ஒரு குறையும் அவர் வைப்பதில்லையாம்.

நல்ல மனுஷன்

லூசி சொல்கிறார்.. இவர் ரொம்ப நல்ல மனுஷன்.. பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறதென்று.. இதற்கு முன்பு இருந்தவர்கள் எல்லாம் எங்களைப் பிரிக்க முயன்றனர். இவர்தான் இருவரையும் இணைத்து பாசம் காட்டுகிறார்.. அதற்காகவே இவருடன் இத்தனை காலம் நெருங்கிப் பழகுகிறோம். இப்போது குழந்தை பெத்துக்கவும் முடிவு பண்ணிட்டோம் என்று சொல்கிறார்.

Comments (0)
Add Comment