“நீ அழகா இருக்கே.. எனக்கு ஆசையா இருக்கு”.. பூரித்து போன பூர்ணா.. மேலும் 2 பேர் கைது!!

சென்னை: “நீ ரொம்ப அழகா இருக்கே.. கல்யாணம் செய்ய ஆசையா இருக்கு” என்று அந்த கேடி ஆசாமி சொன்னதுமே பூர்ணா பூரித்து போய்விட்டார்.. மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று இறுதியில்தான் நடிகை பூர்ணாவுக்கு தெரியவந்தது.. 10 லட்சம் ரூபாய் நகை, பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த அந்த கும்பலில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடந்த நடிகை பூர்ணா, டிக்டாக் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்… ஷம்னா காசிம் என்பதுதான் இவரது டிக்டாக் அக்கவுண்ட் பெயர்.. இந்த சமயத்தில்தான் பூர்ணாவுக்கு ஒருவர் டிக்டாக்கில் பழக்கமாகி உள்ளார்.. அவர் பெயர் அன்வர்.

துபாயில், கோழிக்காட்டில் நகை கடை வைத்திருப்பதாக சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்ய ஆசையாக உள்ளது என்று சொல்லவும், இதை கேட்டு பூரித்துவிட்டார் பூர்ணா, வீட்டில் வந்து முறைப்படி பெண் கேட்க சொல்லி, அதன்படியே அன்வர் 6 பேரை அழைத்து கொண்டு பூர்ணா வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவர்கள் அனைவருமே டுபாக்கூர் என பூர்ணாவுக்கு தெரியவந்தது.

ஆனால் அந்த கும்பல் பூர்ணாவிடம் 10 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்தது.. கடைசியில் பூர்ணாவின் அம்மா போலீசுக்கு போனார்.. அந்த புகாரின்பேரில், அந்த மோசடி கும்பலில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்… ரபீக், ரமேஷ் கண்ணன், சிவதாசன், அஷ்ரப் என்பது அவர்களின் பெயர்கள்.. இவர்கள் எல்லாருமே திருச்சூரை சேர்ந்தவர்கள்.. தொடர் விசாரணையும் நடந்தது. அப்போதுதான் இந்த கும்பல் மிகப்பெரிய நெட் ஒர்க் என தெரியவந்தது.

கேரள கடத்தல் பெண் ஸ்வப்னாவுக்கும் இவர்களுக்கும்கூட தொடர்பு இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து கல்யாண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

அவர்களிடம் விசாரணையின்போது, பல பகீர் தகவல்களும் வெளியாகின.. மாடல் அழகிகள், டிவி சீரியல் நடிகைகள் உட்பட பல பெண்களுக்கு, சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி, நம்ப வைத்து ஏமாற்றி, அவர்களிடம் பணம், நகையை அந்த கும்பல் பறித்து வந்ததும் தெரியவந்தது.

அது மட்டுமல்ல, பாலக்காட்டிலுள்ள ஒரு ஹோட்டல் ரூமில் இத்ந பெண்களை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.. இந்தநிலையில்தான், இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் ஆவர்.. பெயர் நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் என்பதாகும்.. தற்போது அவர்கள் கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

Comments (0)
Add Comment