அம்மாவுடன் நெருக்கம்.. கைவிடாத ஜவுளி கடை வாட்ச்மேன்.. ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்.. பறி போன உயிர்!!

செல்வியின் காமம் ஒரு உயிரையே பறித்துவிட்டது.. தன் அம்மாவுடனான கள்ளக்காதலை கைவிடாததால், ஜவுளிக்கடை வாட்ச்மேனை ஓட ஓட விரட்டி கொன்று விட்டார் மகன்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. போரூரை சேர்ந்தவர் முனியாண்டி 46 வயதாகிறது.. சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி பெயர் சொர்ணகிளி.. 3 பிள்ளைகள் உள்ளனர்..

ஆனால், சொர்ணகிளியை விட்டு முனியாண்டி பிரிந்து விட்டார்.. 5 வருஷமாகவே தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மாம்பலத்தில் வசித்து வந்த செல்வி மீது முனியாண்டிக்கு லவ் வந்தது.. செல்வி ஒரு விதவை.. 2 மகன்கள் உள்ளனர். செல்வியின் கள்ள காதல் விவகாரம் 2 மகன்களுக்கும் தெரியவந்தது… இதனால் மூத்த மகன் ராஜேஷ், தன் அம்மாவிடம் காதலை கைவிட சொன்னார்.. ஆனால் அவர் மறுக்கவும், வீட்டை விட்டு தனியாக போய் ரூம் எடுத்து தங்கி வருகிறார்.. இப்போது இளைய மகன் வேலாயுதத்துக்கு இன்னும் ஆத்திரம் கூடியது.. அவரும் சொல்லி சொல்லி பார்த்துவிட்டு, சைதாப்பேட்டை தனியாக வசித்து வருகிறார். தனியாக வீடு எடுத்து கொண்டு போனாலும், வேலாயுதத்திற்கு தன் அம்மா செய்வது கோபத்தையே உண்டுபண்ணியது.. அதனால் பலமுறை அம்மாவை கண்டித்தார்..

முனியாண்டியை தினமும் கண்டிப்பதுதான் வேலாயுதத்தின் வேலை. ஆனால் இந்த ஜோடி திருந்தவே இல்லை.. 2 மகன்களும் வீட்டை விட்டு போய்விட்டதால், முனியாண்டி செல்வி வீட்டுக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார்.. இதை பார்த்த வேலாயுதத்துக்கு டென்ஷன் எகிறியது.. அதனால் முனியாண்டியை போட்டு தள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.. அதனால், அதற்காக நண்பர்களையும் தயார் செய்தார்.. முனியாண்டி வேலை முடிந்து காதலி செல்வி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த வேலாயுதம், முனியாண்டியை அரிவாளால் வெட்டினார்.

நண்பர்களுடன் வெறி கொண்டு வேலாயுதம் வெட்டியதால், வலி தாங்க முடியாமல் முனியாண்டி அலறி ஓடினார்.. விடாமல் துரத்தி சென்ற வேலாயுதம் ஆத்திரம் தீரும் வரை வெட்டி சாய்த்தார். முனியாண்டி உயிர் போய்விட்டதா என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான் அங்கிருந்து நகர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்து குமரன் நகர் போலீசார் விரைந்து வந்தனர்..

முனியாண்டி உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அதற்குள் வேலாயுதம் தலைமறைவானார்.. இதையடுத்து கள்ளக்காதலி செல்வி மகன் மீது புகார் கொடுத்தார்.. அந்த புகாரின் படி வேலாயுதம் உட்பட 4 பேரை போலீசார் 5 மணி நேரத்திலேயே மடக்கி கைது செய்தனர்.. தற்போது அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Comments (0)
Add Comment