ரபேல் வருகை: ’பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புபவர்கள் தான் கவலைப்படுவார்கள்’ – ராஜ்நாத் சிங்..!!

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் \ விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத்தளத்தில் ரபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ பறவைகள் (ரபேல் விமானங்கள்) பத்திரமாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன. ரபேல் விமானங்களின் வருகை இந்தியாவின் ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்துள்ளது.

இந்த விமானங்கள் மிகவும் சிறப்பாக பறக்கும் தன்மையை கொண்டுள்ளது. மேலும், அதன் ஆயுதங்கள், ரேடார் மற்றும் இதர போர் கருவிகள் உலக அளவில் தலைசிறந்ததாகும்.

ரபேலின் வருகை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்திய விமானப்படைக்கு கூடுதல் வலிமையை வழங்குகிறது.

இந்திய விமானப்படையின் இந்த புதிய திறனைப்பற்றி யாராவது கவலையோ அல்லது விமர்சமங்களோ வைத்தால் அவர்கள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவவர்களாகத்தான் இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment