முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.. ஒதுங்கி ஒதுங்கி போன மாப்பிள்ளை.. திடீர்னு ஓட்டம்.. என்னாச்சு!

எப்ப கேட்டாலும் முதலிரவு வேணாம், வேணாம் என்று சொல்லி கொண்டே இருந்தாராம் புது மாப்பிள்ளை.. இப்படியே ஒன்றரை மாசம் எஸ்கேப் ஆனது எதற்காக, ஏன் என்ற அதிர்ச்சியோ அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெயர் பாஸ்கர்.. இவருக்கு 30 வயதாகிறது.. அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.. அங்கேயே குடியுரிமையும் பெற்றுவிட்டார்.. 30 வயதாகி விட்டதால், அவருக்கு கல்யாணம் செய்ய பெற்றோர் முயன்றனர்.. குண்டூரிலேயே ஒரு பெண்ணையும் தேர்ந்தெடுத்தனர்.. அந்த பெண்ணுக்கு 25 வயசு!

கடந்த மார்ச் 18-ம் தேதி இவர்கள் கல்யாணம் நடந்தது.. கொரோனா டைம் என்பதால், முக்கியமானவர்கள் மட்டுமே இந்த கல்யாணத்திற்கு வந்திருந்தனர்.. அமெரிக்க மாப்பிள்ளை என்பதால், பெண்ணுக்கு 50 லட்சம் ரூபாய், 70 சவரன் நகை என பெண் வீட்டில் சகலமும் செய்தனர்.. அப்படியே முதலிரவுக்கும் ஏற்பாடு செய்தனர். எத்தனையோ கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் நுழைந்த அந்த பெண்ணுக்கு, ஒரு ஷாக் தகவலை சொல்ல உள்ளே உட்கார்ந்திருந்தார் பாஸ்கர்.. “உடம்பு சரியில்லை, இன்னைக்கு வேணாம்” என்று சொல்லிவிட்டு குப்புற படுத்து கொண்டு தூங்கிவிட்டாராம்.. மறுநாளும் இப்படியே சொல்லி உள்ளார்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி பாஸ்கர் குறட்டை விட்டு தூங்கி வந்திருக்கிறார்.. இப்படியே ஒன்றரை மாசம் ஆகிவிட்டதாம். இதையெல்லாம் பார்த்து நொந்து போன புதுப்பெண், கண்ணீர்விட, விஷயம் பெண்ணின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது.

இதை கேட்டு, பெண்ணுக்கு மேல் அவர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.. உடனே பாஸ்கரின் பெற்றோரிடம் இதை பற்றி பேசப்பட்டது.. அவர்களும் இதை கேட்டு ஷாக் ஆனார்கள். ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து பாஸ்கரிடம் பஞ்சாயத்துக்கு போனார்கள்,. “என்ன பிரச்சனை, பொண்ணை பிடிக்கலையா?” என்று உலுக்கி கேட்கவும், பெண்களை பார்த்தாலே தனக்கு எதுவும் தோன்றுவதில்லை என்று அப்போதுதான் விஷயத்தை சொன்னார். அதுமட்டுமல்ல, தனக்கு ஏற்கனவே அமெரிக்காவில் இளைஞருடன் 4 வருஷமாக குடும்பம் நடத்தி வருவதாகவும், இன்னொரு குண்டையும் சேர்த்து போட்டார்.

இதை கேட்டதும், அடுத்த நிமிஷமே கல்யாண பெண், அம்மா வீட்டுக்கு பறந்து போய்விட்டார்.. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்த பாஸ்கர் மாமியார் வீட்டுக்கு போனாராம்.. ஒரு கண்டிஷனையும் மனைவிக்கு போட்டாராம்.. அதன்படி, ஒன்றாக சேர்ந்து வாழ்வதில் தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.. தன்னுடன் அமெரிக்காவுக்கு தாராளமாக வரலாம்.. அதேசமயம், ஏற்கனவே குடும்பம் நடத்திவரும் அந்த ஆண் நண்பருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்றாராம். இந்த குண்டை போட்டதும் குண்டூரே குலுங்கிவிட்டது.. இதற்கு மேல் பொறுக்க முடியாத புதுமணப் பெண், குண்டூர் போலீசுக்கு போய் புதுமாப்பிள்ளை மீது புகாரை தந்தார்.. அந்த புகாரின்பேரில் விசாரணையும் நடக்கிறதாம்.

Comments (0)
Add Comment