பரப்புரைக் கூட்டத்திற்குள் நுழைந்து சந்திரகுமார் அணி தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் இன்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர்
பளையில் நடைபெறுகின்ற பரப்புரைக் கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பரப்புரையில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிசார் முன்றலிலையே இடம்பெற்றுள்ளது இதன் போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாக அறியமுடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment