“டேய்.. கையை எங்கே வந்து வெக்கிறே”.. ஓடும் பஸ்ஸில் ரோமியோவை.. அடித்து துவைத்த இளம்பெண்.. மாஸ் வீடியோ!! (வீடியோ)

பெங்களூரு: உடம்பில் கண்ட கண்ட இடங்களில் உரசி கொண்டும், சீண்டி கொண்டும் இருந்த அந்த ரோமியோவை, பிடித்து வெளு வெளுவென வெளுத்துவிட்டார் ஒரு இளம்பெண்… ஓடும் பஸ்ஸிலேயே செருப்பாலேயே அடியும் வாங்கினார் அந்த இளைஞர்!

கர்நாடகா மாநிலம் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை ஒரு பஸ் சென்றுள்ளது.. அதில்தான் அந்த இளம்பெண் ஏறினார்.. அங்கிருந்த ஒரு சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.

அந்த சீட்டுக்கு பின் சீட்டில் ஒருவர் ஏற்கனவே உட்கார்ந்திருந்தார்.. பஸ் சென்று கொண்டிருந்தபோது, பஸ் கம்பிக்கு நடுவில் தன் கையை விட்டு, பெண்ணை சீண்டி உள்ளார்.. கண்ட கண்ட இடங்களில் அந்த நபரின் கைகள் படுவதை உணர்ந்த அந்த பெண் கொதித்தெழுந்துவிட்டார். ஆத்திரம் அடைந்து, அந்த நபரை பஸ்ஸுக்குள்ளேயே வைத்து அவரை குமுறி குமுறி எடுத்தார்.. காலை தூக்கி தூக்கி உதைத்தார்.. பிறகு தன்னுடைய செருப்பை கழட்டியும் அந்த நபரை விளாசினார்.. அந்த நபர் மன்னிப்பு கேட்கும்வரை விடவே இல்லை.

இந்த ரண களத்தினால் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.. உடனே அந்த நபர் கீழே இறக்கப்பட்டார்.. உடனே அவரிடம் 2 பேர் என்ன நடந்தது என்று சட்டையை பிடித்து விசாரிக்க முயன்றனர்.. ஆனால் அந்த சபலிஸ்ட் , அவர்களிடமிருந்து தப்பித்து பக்கத்தில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஓடிவிட்டார். இந்த காட்சி அத்தனையையும் பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்தவீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. கையில் செருப்பை வைத்து கொண்டு இளம் பெண் அந்த ஆசாமியை அடிப்பதை பார்த்த பலரும் அவரது துணிச்சலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment