உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரிப்பு!! (வீடியோ, படங்கள்)

உலக நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,98,419 ஆகும்.

கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,87,783. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,17,100. உலக நாடுகளில் அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,63,609. பிரேசிலில் இது 27,08,876 ஆகவும் இந்தியாவில் 17,51,919 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,57,877 பேர் இறந்துள்ளனர். பிரேசிலில் மட்டும் கொரோனா மரணங்கள் ஒரு லட்சத்தை நோக்கி செல்கிறது. இங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 93,616.

ஆனால் இந்தியாவில் 37,403 பேர்தான் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, பிலிப்பைன்ஸ், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


புதிதாக ஒருவருக்கு கொரோனா – 75 பேருக்கு பூரண குணம்!!

கர்நாடகாவில் கொரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி..!!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று – கண்காட்சி மையத்தை மருத்துவமனையாக மாற்றிய ஹாங்காங்..!!

உலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்கு கொரோனா!

கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது – முதல் நாடாக அறிவித்த ரஷியா..!!

2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு..!!!

நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி!! (மருத்துவம்)

3.6% வேகம்.. அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகம்.. இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. இன்று புது உச்சம் !! (வீடியோ, படங்கள்)

Comments (0)
Add Comment