சரவண பவனுக்கு வந்த சோதனையைப் பாருங்க.. சாம்பாரில் மிதந்த பல்லி.. கேஸ் போட்ட போலீஸ்! (வீடியோ)

டெல்லியில் இருக்கும் சரவண பவன் ஓட்டல் சாம்பாரில் பல்லி இருந்தது கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, கன்னாட் பகுதியில் இருக்கும் சரவண பவன் ஓட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பதேபூர் பகுதியில் இருக்கும் தனது நண்பர்களுடன் கன்னாட் பகுதியில் இருக்கும் சரவண பவன் ஓட்டலுக்கு பங்கஜ் அகர்வால் சென்றுள்ளார். இவர் கொடுத்த தோசை ஆர்டரில் கிண்ணத்தில் சாம்பார் கொடுக்கப்பட்டுள்ளது. தோசையை பாதி சாப்பிட்டு விட்டார். பின்னர் கிண்ணத்தில் இருந்த சாம்பாரை எடுத்து தோசையில் ஊற்றும்போது, அதில் இருந்து பல்லி விழுந்துள்ளது. அந்தப் பல்லியும் பாதியாக இருந்துள்ளது. பாதி தோசையை சாப்பிட்ட பின்னர் இது நடந்தது பங்கஜை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பின்னர் தனக்கு உணவு கொடுத்தவரை அழைத்துக் காட்டி, சாம்பாரில் பாதி பல்லி கிடக்கிறது. உங்களது பெயர் என்னவென்று கேட்கிறார். இவை அவர் எடுத்து இருக்கும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

அருகில் இருக்கும் மற்றொரு நபர் உணவு விடுதியின் பெயர் தெரியுமாறு புகைப்படம் எடுங்கள் என்று கூறுகிறார். அதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து போலீசில் பங்கஜ் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவையும் கைப்பற்றி உள்ளனர். மேலும், யார் உணவு சமைத்தது, என்ன பொருள் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்கள் கேட்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 39 இடங்களில் சரவண பவனுக்கு ஓட்டல் இருக்கிறது. வெளிநாடுகளிலும் ஓட்டல்கள் உள்ளன.

Comments (0)
Add Comment