வாழை இலை அறுக்க கணவனை அனுப்பிவிட்டு.. பாத்ரூமில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்த சுகன்யா.. திகில் தி.மலை!! (படங்கள்)

கணவனை வாழை இலையை அறுக்க அனுப்பிவிட்டு, பெற்ற குழந்தையை மகளை தரதரவென பாத்ரூமுக்கு இழுத்து சென்று, அரிவாள் மனையாலேயே கழுத்தை அறுத்து கொன்றுவிட்டார் சுகன்யா.. இந்த சம்பவத்தினால் திகிலில் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள கிராமம் கீழ்சிறுப்பாக்கம்.. இங்கு வசித்து வரும் தம்பதி கலையரசன் – சுகன்யா.. இவர்களுக்கு 6 வயதில் நிவேதா பெண் குழந்தை இருக்கிறாள். சுகன்யாவுக்கு 28 வயசாகிறது.

இந்நிலையில், போன வருஷம், கலையரசனின் அம்மா திடீரென வீட்டில் தூக்கு போட்டு தறகொலை செய்து கொண்டார்.. மாமியார் பிணம் நடுவீட்டில் தொங்குவதை சுகன்யாதான் முதலில் சென்று பார்த்துள்ளார். அலறி கத்தினார்.. அப்போதிருந்தே அவருக்கு மன, உளவியல் ரீதியான பாதிப்பு இருந்துள்ளது.

மாமியார்

ஒரு மாதிரி இருக்கிற நேரம் இன்னொரு மாதிரி இருக்க மாட்டாராம் சுகன்யா.. திடீர் திடீரென உணர்ச்சி வசப்படுவாராம்.. சத்தம் போடுவாராம்.. “மாமியார் என்னை கூப்பிடறாங்க.. எப்பவுமே வா வா..ன்னு கூப்பிடறாங்க” என்று புலம்பி கொண்டே இருப்பாராம்.. அதனால் சுகன்யாவை கலையரசன் கவனமாகவே பார்த்து வந்துள்ளார்.

வாழையிலை

இந்த நிலையில், ஆடி பதினெட்டு முன்னிட்டு, மாமியாருக்கு விருந்து ஏற்பாடு செய்து உள்ளார் சுகன்யா.. படையல் போடுவதற்கு சுகன்யா கலையரசனிடம் வாழை இலை அறுத்து வரும்படி சொல்லவும், அவரும் வயலுக்கு போய் உள்ளார்.. அப்போது குழந்தையுடன் சுகன்யா மட்டும் தனியாக இருந்தார்.

விளையாட்டு

அடிக்கடி வரும் பிரச்சனை இப்போது திடீரென வந்துவிட்டது.. சுகன்யாவின் மனநிலை கொடூரமாக மாறியது.. விளையாடி கொண்டிருந்த குழந்தையை வெறிபிடித்த மாதிரி அடித்து தாக்கினார்.. முடியை பிடித்து சுவற்றில் முட்டினார்.. அப்படியே தரதரவென அந்த குழந்தையை பாத்ரூமுக்கு இழுத்து சென்றுள்ளார்.

அரிவாள்மனை

பாத்ரூமில் வைத்து, அரிவாள்மனையாலேயே மகளின் கழுத்தை அறுத்துவிட்டார்.. அந்த குழந்தை அப்போதே துடிதுடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு பிறகு அரிவாள் கையில் இருந்ததால், அதில் தன் கழுத்தையும் சுகன்யா அறுத்து கொண்டதாக தெரிகிறது.

கதறி கதறி அழுதார்

இதில் ரத்தம் கொட்டி, அவரும் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. வெளியில் சென்றிருந்த கலையரசன் வீடு திரும்பி, 2 பேரையும் தேடினார்.. அப்போதுதான் பாத்ரூமில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு ஷாக் ஆகி கதறி கதறி அழுதார்.. இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் தந்த தகவலின்பேரில் தண்டராம்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர்… குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

போஸ்ட் மார்ட்டம்

உயிருக்கு போராடிய சுகன்யாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இப்போது சுகன்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. ஆனால் சீரியஸாக இருக்கிறாராம்.. குழந்தையின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போது, சுகன்யா மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதிர்ச்சி

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது… ஏற்கனவே உடம்பு சரியில்லாத பெண்ணை வீட்டில் தனியாக இவர்கள் ஏன் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை.. அதுவும் குழந்தை இருக்கும்போது, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாமல் குடும்பத்தினர் இந்த காரியத்தை செய்தது ஏற்கவே முடியாது.. அந்த குழந்தையை நினைத்தாலே நமக்கு நெஞ்சம் பதறி போய்விடுகிறது!

Comments (0)
Add Comment