இலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது! சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல் !! (படங்கள்)

இலங்கையில் ஹெராயின் கடத்தல் வழக்கில் தப்பித்த பூனை சிக்கிவிட்டதாம். வெலிக்கடை சிறைக்கு தப்பிய பூனை தாமே திரும்பிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன்கள், போதைப் பொருட்கள் விநியோகப்படுவது போலீசாருக்கு தலைவலியாக இருந்தது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சிறை மதில்களில் இருந்து கோட் வேர்டுடன் போதை பொருள் பொட்டலங்கள் வீசப்படுவது தொடர் கதையானது. இதனையும் ஒருவழியாக ஒடுக்கியது இலங்கை போலீஸ்.

கடத்தலில் பூனைகள்

ஆனாலும் சிறை கைதிகளுக்கு போதை பொருட்கள் தாராளமாக கிடைத்தது வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளி பூனைகள் மூலம் ஹெராயின் போதை பொருட்கள், சிம் கார்டுகள் சிறைக்குள் அனுப்பி வைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

போதை பொருள் கடத்திய பூனை

பின்னர் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறை அருகே கழுத்தில் பொட்டலம் ஒன்றுடன் திரிந்து கொண்டிருந்த பூனை சிக்கியது. அந்த பூனையின் கழுத்தில் ஹெராயின் போதை பொருள், சிம் கார்டுகள் இருந்ததும் அதில் சங்கேத குறியீடு எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

சிறையில் இருந்து தப்பிய பூனை

ஆகையால் ஹெராயினை கடத்தி வந்த பூனையை வெலிக்கடை சிறைக்குள் பூட்டி அடைத்து வைத்தனர். ஆனால் திடீரென இந்த பூனை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனையை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் வெலிக்கடை சிறைக்குள் பூனை ஒன்று சுதந்திரமாக திரிவது தெரியவந்தது.

தப்பிய பூனை திரும்பி வந்தது

சிறை அதிகாரிகள் அந்த பூனையை பிடித்து பார்த்த போது, சிறையில் இருந்து தப்பியதும் அதுதான் என்பது உறுதியானது. சிறை அறையில் இருந்து தப்பிய பூனை தாமாகவே மீண்டும் சிறை வளாகத்துக்கு வந்துவிட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அன்று புலிகளை தேடிய இலங்கை போலீஸ்…. இன்று ஹெராயின் கடத்தலில் பிடிபட்டு தப்பிய பூனையை தேடுதாம்!!

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை பிடிக்கப்பட்டது!!

Comments (0)
Add Comment