நள்ளிரவில் அலறிய “கருப்பு பூனை”.. மந்திரவாதியுடன் சிக்கிய 70 வயசு பாட்டி.. திகில் கிளப்பிய களக்காடு!! (படங்கள்)

நரபலி கொடுக்க இருந்த கருப்பு பூனை ஒன்று நள்ளிரவு பூஜையில் அலறி தப்பி ஓடிவிட்டது.. அந்த பூனையால் இன்று 3 பேர் கைதாகி ஜெயிலுக்குள் இருக்கிறார்கள்.. அதை பற்றின செய்திதான் இது!

களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில், தங்கப்புதையல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது சடையமான்குளம் என்ற பகுதி.. இங்கு பார்வதி பாட்டி என்பவர் வசித்து வருகிறார்.. 70 வயதாகிறது.. பாட்டிக்கு கிரானராஜன் என்ற ஒரு மந்திரவாதி பழக்கமாகி இருக்கிறார்.

பில்லி சூனியம் வைப்பது, மாந்திரீகம் செய்வது, புதையல் எடுப்பது இப்படி எல்லாமே தனக்கு தெரியும் என்று அந்த மந்திரவாதி ஊரை ஏமாற்றி வந்திருக்கிறார்.. எதையாவது கேட்டால், பில்லி, சூனியம் வைத்துவிடுவாரோ என்று பயந்து கொண்டு, யாருமே அந்த மந்திரவாதியை எதிர்த்து பேசுவது கிடையாது.

கல்யாணம்

இந்த பார்வதி பாட்டிக்கு குழந்தைகள் இல்லை.. அதனால் குமரேசன் என்பவரை, குழந்தையில் இருந்து வளர்த்து கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்.. அவருக்கு 5 மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்… இந்த பாட்டி எப்பவுமே வீட்டில் பூஜை செய்து கொண்டே இருப்பாராம்.. இதற்கு குமரேசனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.. அதனால் ஊர் மக்கள் யாருமே இதனை கண்டுகொள்வதில்லை.

நள்ளிரவு

சம்பவத்தன்றும் அப்படித்தான் நடுராத்திரி பூஜை செய்துள்ளார்.. இதற்கு காரணம் பாட்டி வீட்டுக்குள் புதையல் இருக்கிறதாம்.. அதை வெளியே எடுத்து தருவதாக மந்திரவாதி புருடா விட்டுள்ளார்.. அதற்குதான் இந்த பூஜை நடந்துள்ளது. நள்ளிரவு நேரம், வீட்டுக்கு மந்திரவாதி வந்தார்.

கருப்பு பூனை

பூஜையில் பலி கொடுக்க, கோழி கறுப்பு பூனையை தயாராக பக்கத்தில் வைத்திருந்தனர்.. மந்திரங்களை சொல்லி கொண்டே மந்திரவாதி வீட்டை சுற்றி சுற்றி வந்தார். உடனே ஒரு கோழியை எடுத்து கொண்டு போய் வீட்டின் மூலையில் பலி தந்தார். மறுபடியும் மந்திரம் சொன்னார்.. பிறகு கறுப்பு பூனையை பலி கொடுக்க தயாரானார்.

மந்திரவாதி

ஆனால் வீட்டை சுற்றிலும் புகை, மந்திர சத்தம் இதையெல்லாம் பார்த்து அந்த கருப்பு பூனை பயந்துவிட்டது.. அதனால், மந்திரவாதி கையில் இருந்து நழுவியும் கத்தி கொண்டு ஓடியது.. இதை பார்த்ததும் மந்திரவாதி டென்ஷன் ஆகிவிட்டார்.. கருப்பு பூனையை பலி தராவிட்டால், மந்திரம் பலிக்காதே என்று புலம்பினார்.. மேலும் வீட்டுக்குள் இருக்கிற புதையல், இன்னும் பாதாளத்துக்கு சென்றுவிடுவாம்.. மேலும் குடும்பத்தில் யாராவது செத்து போய்விடுவார்கள் என்று அடுக்கடுக்காக பீதியை கிளப்பி பாட்டியை மிரள வைத்தார்.

5 மாத குழந்தை

பூஜையை முடிக்கணும் என்றால் என்ன செய்யணும்? என்று பாட்டி கேட்க, குமரேசனின் மூத்த மகன், அல்லது கடைசி மகன் 2 பேரில் ஒருத்தரை நரபலி தந்தால் சரியாகிவிடும் என்று மந்திரவாதி சொன்னார். புதையலும் கிடைக்கணும், உயிருக்கு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால், தன்னுடைய 5 மாத குழந்தையை பலி தர முன்வந்தார் குமரேசன். ஆனால் இவ்வளவும் நடக்கும்போது, குமரேசன் போதையில்தான் இருந்தார்.

களக்காடு

தூங்கி கொண்டிருந்த குழந்தையை பலி கொடுக்க குமரேசன் தூக்கி சென்றதை பார்த்து, அவரது மனைவி அலறி சத்தம் போட்டார்.. மந்திரவாதி கையில் இருந்து குழந்தையை பிடுங்கி கொண்டு வீட்டை விட்டு தெருவுக்கு ஓடிவந்தார்.. அதற்குள் கிராம மக்கள் கூடிவிட்டனர்.. அவர்களிடம் நடந்ததை சொல்லவும், விஷயம் களக்காடு போலீசுக்கு போனது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டதுடன், மந்திரவாதியை கைது செய்தனர்.. அத்துடன், பாட்டி, குமரேசனையும் அள்ளி கொண்டு போனது போலீஸ் புதையலுக்காக இப்படி பெற்ற குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Comments (0)
Add Comment