லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு..!! (படங்கள், வீடியோ)

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது, ஜன்னல்களை அதிர்ந்தன. கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளில் நெருப்புடன் புகை வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. சில மைல் தூரத்திற்கு பூமியே குழுங்கியது. இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை. விபத்தா அல்லது சதி செயலா என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மிக மோசமான குண்டு வெடிப்பு என்று பெய்ரூட்டில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர். “நான் தெருவில் நடந்து கொண்டிருந்தேன், நான் தரையில் வீசப்பட்டேன்” என்று கோத்ர் என்பவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மக்களிடையே “பீதி மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
Comments (0)
Add Comment