லெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு..!!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் ரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அதேவேளையில் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. உயிரிழப்பு, வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை.

Comments (0)
Add Comment