குண்டுகளில் பயன்படும் NH4NO3.. அதீத விஷத்தன்மை வாய்ந்தது.. லெபனானில் பரவிய சிவப்பு வாயு.. பின்னணி! (வீடியோ,படங்கள்)

லெபனானில் பெய்ரூட்டில் ஏற்பட்ட கிடங்கு விபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட்டின் வேதியியல் பண்புகள், ஆபத்துகள் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. லெபனானில் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் நேற்று இரவு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 100 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த வெடிப்பிற்கு காரணமாக அங்கு இருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சொல்லப்படுகிறது. இந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய காரணத்தால், விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அம்மோனியம் நைட்ரேட் அந்த கிடங்கில் ஐந்து வருடங்களாக குவிக்கப்பட்டு இருக்கிறது.

எப்படி

அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 என்பதாகும். இது இயற்கையாகவும் கிடைக்கும். செயற்கையாக வேதியியல் முறைப்படியும் எளிதாக உருவாக்கலாம். தற்போதெல்லாம் உலகம் முழுக்க இதை 100% செயற்கையாக உருவாக்கி பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்க இந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும்.

வெடி மருந்து

விவசாயத்தில் இதுதான் உரமாக பயன்படுகிறது. இன்னொரு பக்கம் குவாரி தோண்ட, கட்டிடம் கட்ட, கட்டிடம் இடிக்க , பாறைகளை உடைக்க இதைத்தான் வெடி மருந்தாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அம்மோனியம் நைட்ரேட் அவ்வளவு எளிதாக வெடிக்கும் பொருள் கிடையாது. குறிப்பிட்ட காலநிலை மற்றும் சூழ்நிலை இருந்தால் மட்டுமே அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கும். இல்லையெனில் அம்மோனியம் நைட்ரேட் சாந்தமாக இருக்கும்

விதிகள் உள்ளது

இந்த அம்மோனியம் நைட்ரேட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நிறைய விதிகள் உள்ளது. இந்த நிலையில்தான் லெபனானில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அளவுக்கு அதிகமாக அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை உமிழும். அதாவது நெருப்பே இல்லாமல் இது கொஞ்சம் கொஞ்சமாக வெப்பத்தை வெளியேற்றும்.

வெடிக்கும்

அதிகமாக அம்மோனியம் நைட்ரேட் குவிக்கப்பட்டு இருந்தால், அதிகமாக வெப்பம் வெளியேறும். இப்படி அதிகமாக வெப்பம் வெளியேறும் பட்சத்தில், நெருப்பே இல்லாமல் தீ விபத்தை அது உண்டாக்கும். அதாவது மின்கசிவு, பற்ற வைப்பது என்று வெளிப்புற காரணி எதுவும் தேவைப்படாமலே தீ தானாக பற்றிக்கொள்ளும். அதேபோல் காலம் செல்ல செல்ல, இது பழையது ஆக ஆக தீ பற்றும் தன்மைகொண்டது.

அதே பின்னணி

இதே அம்மோனியம் நைட்ரேட்தான் அங்கு லெபனான் கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக இது வெடிக்கும் போது சிவப்பு நிற நைட்ரஜன் ஆக்சைட் புகையை வெளியிடும். இது அதிக நச்சுத்தன்மை கொண்டது. ஆளை நொடியில் கொல்லும் சக்தி கொண்டது. லெபனானில் சிவப்பு புகை வந்த போதே அங்கு பலர் இது குறித்து அச்சம் தெரிவித்தனர்.

ஆக்சிஜன் எப்படி

அதேபோல் அம்மோனியம் நைட்ரேட் ஆக்சிஜனை வெளியிடும் என்பதால் தீயும் வேகமாக பரவும். அதுவும் 5 வருடமாக வைக்கப்பட்டு இருந்த பழைய அம்மோனியம் நைட்ரேட் ஆகும் இது. இதனால் அம்மோனியம் நைட்ரேட் வெப்பத்தை உமிழ்ந்து தானாக வெப்பம் வெளியிடப்பட்டு தீ பிடித்து வெடித்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள் . இதுவரை லெபனான் வெடிப்பிற்கு கூறப்படும் நம்ப தகுந்த ஒரே காரணம் இதுமட்டும்தான்.

வெடிகுண்டுகள்

அதே சமயம் லெபனானில் இருக்கும் சில தீவிரவாத அமைப்புகள் அம்மோனியம் நைட்ரேட் மூலம் வெடிகுண்டுகள் உருவாக்குவதும் வழக்கம். அங்கு எளிதாக அம்மோனியம் நைட்ரேட் கிடைக்கும். உரம் வாங்கி அதில் இருந்து அம்மோனியம் நைட்ரேட்டை பிரித்து, அதில் இருந்து கூட குண்டுகளை உருவாக்க முடியும். இதனால் இப்படி யாராவது குண்டுகளை உருவாக்கி தாக்குதல் நடத்தினார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது .

பெய்ரூட் வெடிவிபத்து: லெபனானில் உள்ள இந்தியர்களுக்காக அவரச உதவிமையம் அமைத்த இந்தியதூதரகம்..!!

லெபனான் பயங்கரம்: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் விபத்து? – முதல்கட்ட தகவலில் 10 பேர் பலி..!!

Comments (0)
Add Comment