யாழ்ப்பாணத்தில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்.!! (படங்கள்)

இலங்கைப் பாராளுமன்றத்தேர்தல் 2020 தொடர்பில் மக்கள் ஆர்வமாகவும் வேகமாகவும் வாக்களித்து வருவதனை அவதானிக்க முடிக்கின்றது.

காலை 7மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் மதியம் 12 மணிவரை 35 வீதத்திற்கும் மேலானதாக இருக்கக்கூடியதாக உள்ளது.

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதனையும் காணமுடிகின்றது.

மேலும் சுகாதாரப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமற்ற நிலையில் உரிய ஏற்பாடுகளுடன் மக்கள் வருகை தருகின்றனர்.அத்துடன் பல வாக்காளர்கள் அடையாள அட்டை வாக்காளர் அட்டை முகக்கவசம் ஆகியவற்றுடன் பேனாக்களையும் எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் கொக்குவில் மேற்கு C.C.T.M பாடசாலையில் வாக்களித்த முதிய பெண்மணி குறிப்பிடுகையில்

“”பேப்பரில அறிவிச்சிருந்தவையள் பேனை கொண்டு வரச்சொல்லி. அது தான் கொண்டு வந்தம் கொண்டுவாறது எங்கட தேவைக்கு தானே. அது நல்லது. ஜ.சி காட்டு மட்டையக் காட்டு கையக் கழுவு கையத் துடை எண்டு நிண்டு செய்விக்கினம். உதுக்க போனா கடைசி வரை யாருக்கும் கொரோணா வராது என்றார் “”அந்த முதிய பெண்மணி.இவ்வாறு மக்கள் தாமாகவே சுய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து வருவதனைக் காணமுடிகின்றது.

மேலும் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கொக்குவில் ஞானபண்டிதா கொக்குவில் மேற்கு சி.சி.ரி.எம். மற்றும் யாழ் சென் ஜேம்ஸ் பாடசாலை வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வமுடன் பங்குபற்றி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

நெடுந்தீவிற்கான போக்குவரத்து கப்பல் சேவை சீராக இல்லை என்றும் வாக்களிக்கச் செல்ல முடியாமல் வாக்காளர்கள் காத்திருப்பில் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் யாழ்.நகரில் 11 மணியின் பின் 50%வீதமான வர்த்தக நிலையங்கள் திறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment