வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்தவர் கைது!!

பிலியந்தலை கோணமடித்த ஸ்ரீ சுத்தானந்த விஹாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த ஒருவர் தான் வாக்களித்த வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை தேர்தல் மத்திய நிலைய அதிகாரிகள் பிடித்து பிலியந்தலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, வாக்களிக்க பயன்படுத்திய வாக்காளர் அட்டையை தனது கையடக்க தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்த ஒருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய இமுல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தின் இலக்கம் 51 வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாக்களித்த வாக்காளர் அட்டையை புகைப்படம் அல்லது ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments (0)
Add Comment