தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

கடந்த சில மணித்தியாலங்களில் பாரிய அளவிலான தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் இன்று (05) இடம்பெற்ற விசேட தேர்தல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

வாக்களிப்பு மிக அமைதியாக நடைபெற்று வருவதாகவும், நடமாடும் சேவையின் மூலம் வாக்களிப்பு நிலையத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய இதுவரை பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் பதிவாகவில்லை எனவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு எந்த முரண்பாடுகளும் இன்றி அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment