புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

புத்தளம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள் சுறுசுறுப்பாகவும் சமுக இடை வெளியை பேணியும் முகக்கவசம் அணிந்தும் சுகாதார விதி முறைப்படி வாக்களித்தனர்.

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் புத்தளம் மாவட்டத்தில் இம்முளை 65 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதுடன் எவ்வி தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

இதே வேளை புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாணடி ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளுக்காக 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆறு இலட்சத்தி 17 ஆயிரத்தி 370 வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 13 அரசியல் கட்சிகளையும் 19 சுயேட்சைக் குழுகளையும் சேர்ந்த 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதே வேளை வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாகாண வாக்காளர்களுக்கான 12 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் தேர்தல் தொகுதி 71 வீதம் ஆனமடுவ தேர்தல் தொகுதி 71 வீதம் நாத்தாண்டி தேர்தல் தொகுதி 60 வென்னப்புவ தேர்தல் தொகுதி 55 சிலாபம் தேர்தல் தொகுதி 62 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாகாண மக்கள் 77 வீதம் வாக்களித்துள்ளனர். புத்தளம் மாவட்டம் முழுவதும் 65 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பெட்டிகளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பு என்னும் நிலையங்களான புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி புத்தளம் சைனப் ஆரம்பப் பாடசாலை மற்றும் புத்தளம் சென்மெரிஸ் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்களிப்பு நிலையங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்று வருவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (படங்கள்)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை!! (வீடியோ)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment