நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிரின் மத்தியிலும் அங்கு 75 சத வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இடையிடையே மழை பெய்ததால் குடைகளை பிடித்துக்கொண்டு, வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாக்குரிமையை நுவரெலியா மாவட்ட மக்கள் பயன்படுத்தினர்.

நுவரெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கத்த ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 65 வீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சராசரியாக 75 வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (படங்கள்)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை!! (வீடியோ)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment