2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்!!!

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணிகள் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் 77 மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 05 மணிக்கு நிறைவடைந்தது.

இம்முறை பொதுத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற வாக்குப்பதியில் நாடளாவிய ரீதியில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று பிற்பகல் 2.30க்கும் 3.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட ரீதியில் வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு!! (வீடியோ)

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!

நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு!! (படங்கள்)

புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (படங்கள்)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை!! (வீடியோ)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment