நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்!!

இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2839 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (06) இனங்காணப்பட்ட 05 கொரோனா தொற்றாளர்களுடன் இந்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இரண்டு பேருக்கும், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருக்கு நெருக்கமான ஒருவருக்கும் மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 2537 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, 291 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment