கூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை !!

கேகாலை நகரில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலில் 20 வயதுடைய கேகாலை வின்சன் விக்ரமசிங்க மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்காக கேகாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment