புருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில் வைத்த மனைவி.. மிரண்ட போலீஸ்!!

புருஷனை கொன்று.. சடலத்தை துண்டு துண்டாக வெட்டி… சுத்தமாக கழுவி.. உப்பு போட்டு.. ப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டார் ஒரு மனைவி! ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் யுஷ்கோ… இவர் ஒரு ஃபேமஸ் பாப் இசை பாடகர்.. இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவரது மனைவி பெயர் குகா.. இவர்களுக்கு 2 வயசில் ஒரு குழந்தை உள்ளது.

அலெக்சாண்டருக்கு போதை பழக்கம் இருந்துள்ளது.. லாக்டவுன் நேரத்திலும் தினமும் குடித்துவிட்டு வந்து குகாவுடன் சண்டை போட்டுள்ளார்.. தினமும் இதே தொல்லையாகவும் இருக்கவும், பொறுத்து பொறுத்து பார்த்த குகா கணவனை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தார்.

சம்பவத்தன்றும் அலெக்சாண்டர் குடித்துவிட்டு வந்து டார்ச்சரில் ஈடுபட்டார்.. உடனே டென்ஷன் தலைக்கேறிவிட்ட குகா, கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து அலெக்சாண்டரை குத்தி கொன்றுவிட்டார்.. 2 வயது குழந்தையின் கண் முன்னே இந்த கொலையை செய்தார். இதில் அலெக்சாண்டர் துடிதுடித்து இறந்துவிட்டார்.. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால், சடலத்தை மறைக்க படாதபாடு பட்டார். பிறகு, சடலத்தை துண்டு துண்டாக வெட்டினார்.. வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்றாக கழுவினார்.. பிறகு அவைகளை வெளியே எடுத்து உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டார்.

வீடெல்லாம் கழுவி கிளீன் செய்துவிட்டு, வழக்கமான வேலையை பார்க்க போய்விட்டார்.. இதற்கு நடுவில் அலெக்சாண்டரின் நண்பர்கள் போன் மேல் போன் செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் அவர்களுக்கு குகா சரியாக பதில் சொல்லவில்லை.. போனையும் ஒருகட்டத்தில் எடுக்கவும் இல்லை.. அதனால் அலெக்சாண்டர் நண்பர்கள் போலீசில் போய் புகார் தந்தனர்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த போலீசார், குகாவிடம் விசாரணை நடத்தினர்.. உளறி கொட்டி கொண்டே பதில் சொன்னார்.. அதன்பிறகுதான், புருஷனை கொன்றுவிட்டு, உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்திருப்பதாக சொன்னார். இதனை கேட்டு மிரண்டுபோனார்கள் போலீசார்.. உடனடியாக அந்த பிரிட்ஜை திறந்து, துண்டு துண்டாக இருந்த சடலங்களை கைப்பற்றினர்.. போதையில் டார்ச்சர் செய்ததால்தான் இப்படி செய்ததாக வாக்குமூலம் தந்தார் குகா. அலெக்சாண்டருக்கு எத்தனையோ லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.. இத்தனை பேர் இருந்தும் இப்படி போதையில் விழுந்து கிடந்தது ஆச்சரியமாக இருக்கிறது.. அதைவிட மனைவி, அவரை கொன்று பிரிட்ஜில் வைத்தது அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது.

Comments (0)
Add Comment