15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை!!

அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.
கோவிட் – 19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களும் க.பொ.த உயர்தரத்துக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு கல்வி அமைச்சு ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்திருந்தது. அதன்படி, சுமார் 5 ஆசிரியர்கள் மாகாண பாடசாலைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை, ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பாடசாலைகளில் இருந்து அவர்களை வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இடமாற்றுவதன் மூலம் ஆசிரியர்களின் வெற்றிடத்தை ஒழுங்குபடுத்தும் திட்டத்தையும் அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

கோவிட் -19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள், எந்தவொரு இடையூறும் இல்லாமல் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய அமைச்சு எடுக்கும் ஒரு உத்தி இது. என்று கல்வி அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.

மற்றொரு திட்டத்தின் கீழ், ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கவும் அரசு எதிர்பார்த்துள்ளது. இந்த திட்டத்தில் ஆட்சேர்க்கப்படுவோர், நியமனத்துக்கு முன்பு, ஆசிரியர் மற்றும் கல்வி டிப்ளோமாவை முடிக்க வேண்டும். ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எழுப்பிய பிரச்சினைகள் காரணமாக இந்த திட்டம் தாமதமானது என்று அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment