ஞானசார தேரர் பாராளுமன்றத்திற்கு…!!

இம்முறை பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வணக்குத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை தேர்ந்தெடுத்துள்ளதாக அபே ஜன பல கட்சி தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சமன் பெரேரா இதனை தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சி 67,758 வாக்குகளை பெற்று ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment