அரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்!

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 16 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹியத்தகண்டியவில் இருந்து அரலகங்வில பகுதியை நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று மேலதிக வகுப்பொன்றிற்கு சென்று வீதியில் நடந்து வந்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 11 மாணவர்கள் பொலன்னறுவை மற்றும் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மாணவர் உயிரிழந்துள்ளார்.

ரத்மல்தென்ன பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அரலகங்வில பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment