குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது!!

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குழு உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகம, யட்டதொலவத்த மற்றும் சென் பீட்டர்ஸ்வத்த ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரிவேல்வர் ஒன்றும் பிஸ்டல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தொடங்கொட லியனகே ஷான் அரோஷ் ஜயசிங்க எனும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment