கொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்!!

16 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,638 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 231 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,880 ஆகும்.

Comments (0)
Add Comment