வீட்டிற்குள் நடந்த அந்த சம்பவம்.. மிரண்டு போன நடிகை காயத்ரி.. என்ன நடந்தது.. சுற்றி வளைத்த போலீஸ்!!

சென்னையில் நடிகை காயத்ரி சாய் வீட்டில் நடந்த அக்கிரமத்தை பார்த்தீங்களா? காயத்ரியே மிரண்டு போய்விட்டார்! powered by Rubicon Project ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையை சேர்ந்தவர் காயத்திரி சாய்… இவர் அஞ்சலி உள்ளிட்ட சினிமாவில் நடித்தவர்.. மொட்டை மாடி மொட்டை மாடி பாட்டில் வருவாரே… அந்த பெண் இவர்தான்.

இவரது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. வயதானவர் என்பதால், அவரை கவனித்து கொள்வதற்காக வேலையாட்களை நியமனம் செய்ய முடிவு செய்தார்.. அதற்காக ஒரு கடந்த மாசம் தனியார் ஏஜென்சி மூலம் தொடர்பு கொண்டு முயற்சிக்கவும் ஒரு பெண் பணியமர்த்தப்பட்டார்.. அவர் பெயர் சிவகாமி.. 44 வயசாகிறது.. மயிலாப்பூர் கபாலி தோட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில், ஒருநாள் வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 சவரன் நகை காணாமல் போய்விட்டது.. அந்த நகைகள் பழங்காலத்து தங்க நகைகளாம். இதனால் பதறிப்போன காயத்ரி, ராயப்பேட்டை ஸ்டேஷனில் உடனடியாக புகார் தந்தார். போலீசாரும் விசாரணையை ஆரம்பிக்க, காயத்ரி வீட்டுக்கு வந்தனர்.. வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று கேட்டபோதுதான், சிவகாமி சிக்கினார்..

அதேவீட்டில் வேலை செய்து வந்த 2 இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர். இந்த 3 பேரில் சிவகாமிதான் இந்த வேலையை செய்தவர் என தெரியவந்தது. வேலையில் சேர்ந்த அடுத்த சில தினங்களிலேயே தன் வேலையை காட்டி உள்ளார் சிவகாமி.. நகைகளை எப்போதோ திருடிவிட்டு, கேஷூவலாக அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், திருடிய நகைகள் பழமையானவை என்பதால், அது பித்தளை என்று நினைத்துவிட்டார். புது நகை போல பளபளப்பாகவும் அது இல்லை என்பதால், தன் வீட்டிலேயே ஒரு ஓரமாக போட்டுவிட்டு, மற்ற நகைகளை மட்டும் அடகு கடையில் வைத்து காசு வாங்கி உள்ளார். ரூ2.50 லட்சத்திற்கு அடகு வைத்திருக்கிறார்.. அதில் 1 லட்சம் ரூபாய்க்கு சிவகாமி தன்னுடையே பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்… தன்னுடைய 2 மகன்கள் பெயரில் தலா ரூ25 ஆயிரம் பேங்க் அக்கவுண்ட்டில் போட்டு வைத்துள்ளார்.. மீதியிருந்த ரூ1 லட்சத்தில் தனக்கு இருந்த கடனையும் அடைத்துவிட்டார்.

இவ்வளவும் மின்னல் வேகத்தில் செய்துவிட்டு ஹாயாக காயத்ரி வீட்டுக்கு சென்று வந்து கொண்டிருந்துள்ளார். இப்போது சிவகாமியை தூக்கி உள்ளே வைத்துள்ளனர் போலீசார்.. அவரிடமிருந்த 12 சவரன் நகையை மீட்டும் விட்டனர்!

Comments (0)
Add Comment