கொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.. அதிர்ச்சி!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 20 வயது இளம் பெண் கொரோனாவால பாதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸை நவ்பல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆம்புலன்ஸில் தனியாக அந்த இளம் பெண் ஏறி சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்சிற்குள் வைத்து ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகே அவர், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண் தனக்கு நிகழ்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நவ்பலை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, நவ்பலை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment