கொரோனா செய்த ஜாலம்.. லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமான தமிழ் சீரியல் பிரபலங்கள்.. யாரெல்லாம் பாருங்க! (படங்கள்)

கொரோனா லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமான தமிழ் சீரியல் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால் பலரும் வேலையிழந்து வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தனர். பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது

பாலிவுட் பிரபலங்கள்

இருப்பினும் சில பிரபலங்களின் குடும்பத்தில் புதுவரவுகள் வந்துள்ளன. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. நடிகை கரீனா கபூர் முதல் பல பாலிவுட் மாடல்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.

குவா குவா சத்தம்

இந்திய அளவில் லாக்டவுன் நேரத்தில் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதேபோல் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரின் வீடுகளிலும் விரைவில் குவா குவா சத்தம் கேட்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்து வருகின்றனர்.

கார்த்திக் – நந்துஜாய்

இந்நிலையில் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் யாரெல்லாம் லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமாகியுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பூவே பூச்சூடவா சீரியல் மூலம் பிரபலமானவர் கார்த்திக் வாசு. 2018 ஆம் ஆண்டு கார்த்திக், நந்துஜாயை திருமணம் செய்தார். இவர்கள் விரைவில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர்.

அக்டோபர்

5 ஆம் தேதி கார்த்திக் லாக்டவுன் நேரமான கடந்த ஜூலை 5 ஆம் தேதி மனைவி நந்துஜாயின் படங்களையும், அவர் கர்ப்பமாக இருந்த நற்செய்தியையும் ஷேர் செய்தார். நந்துஜாயின் வளைகாப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த போட்டோக்களையும் கார்த்திக் பகிர்ந்து கொண்டார். மேலும் அக்டோபர் 5 குழந்தையை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

ஹேமா ராஜ்குமார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமாரும் கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜூன் இரண்டாவது வாரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அவர் அறிவித்தார். ஹேமாவின் வளைகாப்பு விழா மற்றும் அவரது மகிழ்ச்சியான படங்களை அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

வரவேற்க காத்திருப்பு

ஹேமாவும் சதீஷும் தங்களது திருமண நாளை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடினர். அந்த போட்டோக்களையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்தார். அவர்கள் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மைனா நந்தினி மைனா நந்தினி அடுத்து மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வரன் தம்பதியும் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர். கடநத் 2019ஆம் தேதி மைனா நந்தினி, சீரியல் நடிகரான யோகேஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மைனா நந்தினி கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

ஷாலி – அவினேஷ்

லவ்பேர்ட்ஸ் ஷாலியும் அவினேஷும் பத்தாண்டுகள் காதல் உறவில் இருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். அம்மன் நடிகையான ஷாலி ஜூலை 19 ம் தேதி தனது வளைகாப்பு போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்தார். அந்த போட்டோக்களுக்கு எங்களின் குடும்பம் பெரிதாக போகிறது என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

Comments (0)
Add Comment