எஸ்.பி சரண் சொன்னபடி வந்த நல்ல செய்தி.. எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ்.. வெண்டிலேட்டர் நீக்கம்! (வீடியோ, படங்கள்)

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அப்போதில் இருந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு பிறகு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் நுரையீரலில் தோற்று அதிகம் ஆகி, உடல்நிலை மோசம் அடைந்தது.

மோசமான உடல்நிலை

இவரின் உடல்நிலை மாறி மாறி ஏற்ற இறக்கமாக இருந்தது. இதனால் இவருக்கு எக்மோ பொருத்தப்பட்டது. அதோடு வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் இவருக்காக நாடு முழுக்க திரையுலகினர் பிரார்த்தனை செய்ய தொடங்கினார்கள். பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தற்போது சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வருகிறார்

கடந்த 10 நாட்களுக்கு முன் இவருக்கு நினைவு திரும்பியது. கடந்த வாரத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்றாக தற்போது மூச்சு விடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவரின் உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது. இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் எஸ்.பி சரண் பேட்டி அளித்துள்ளார். அதில், எஸ்.பி.பி உடல் நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. திங்கள் கிழமை (இன்று) நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல செய்திக்காக காத்து இருக்கிறேன், என்று எஸ்.பி.பி சரண் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்படியே நடந்தது

இந்த நிலையில் எஸ்.பி சரண் சொன்னது போலவே இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.எஸ்.பி.பிக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் அவரை உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.

நீக்கப்பட்டது

அதோடு எஸ்.பி.பிக்கு பொருத்தப்பட்ட வெண்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் நுரையீரலில் இன்னும் தோற்று சரியாகவில்லை. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவர் முழு நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment