பார்க்கிங் ஸ்பெஷலிஸ்ட்… குறுகலான ஸ்லாப் மீது அசால்ட்டாக காரை பார்க் செய்த கேரள மனிதர்..!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிஜூ என்பவர் சமீபத்தில் தனது நண்பரின் வெள்ளை நிற இன்னோவா காரை, சாலையோரம் இருந்த குறுகிய ஸ்லாப் மீது சாமர்த்தியமாக பார்க்கிங் செய்துள்ளார்.

பிளாட்பாரத்தையும் சாலையை ஒட்டியுள்ள இடத்தையும் இணைக்கும் வகையில் அந்த ஸ்லாப் அமைக்கப்பட்டுள்ளது. சரியாக அந்த காரின் நீளம், அகலத்தில் தான் ஸ்லாப் உள்ளது.

பிளாட்பாரத்தில் இருந்து அந்த ஸ்லாப் மீது காரை ஏற்றும் பிஜூ, காரை மெதுவாக முன்னும் பின்னும் அங்குலம் அங்குலமாக நகர்த்தி துல்லியமாக பார்க்கிங் செய்தார்.

கொஞ்சம் நிலை தடுமாறினாலும் கார் ஸ்லாப்பில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்துவிடும். எனினும், அசால்ட்டாக அதில் காரை பார்க்கிங் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலர் அவரது பார்க்கிங் திறமை பற்றி பாராட்டினர். இதுபோன்று பார்க்கிங் செய்யும்போது ஆபத்தும் இருப்பதால், யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த வீடியோக்கள் வைரலான பிறகே, தனது கார் பார்க்கிங் திறமை சமூக வலைதளங்களில் வைரலாகியிருப்பது பிஜூவுக்கு தெரியவந்தது.

இது குறித்து பிஜூ கூறுகையில், ‘ஏற்கெனவே பேருந்து ஓட்டிய அனுபவம் எனக்கு இருக்கிறது. குறிப்பாக எர்ணாகுளம் – கண்ணூர் சாலையில் பல வருடங்களாக பேருந்து ஓட்டியிருக்கிறேன். காரின் நீளம், அகலம் எனது நினைவில் அப்படியே வரைபடமாக பதிந்ததால், குறுகலான இடத்திலும் காரை பார்க் செய்ய முடிந்தது’ என்றார்.

Comments (0)
Add Comment