தேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல – ப.சிதம்பரம் கருத்து..!!

ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலங்களுக்கு உடனடியாக தேவைப்படும் நிதி எனவும், மத்திய அரசு அதற்கான நிதியை திரட்டவும், அதனை வழங்கவும் வேறு பல வளங்களை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்,

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் திட்டங்களும் அறிவிப்புகளும் எந்த மதிப்பும் இல்லாத ஆறுதலான வார்த்தைகளாகவே உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 500 மூலம் இன்றுள்ள நிலையில் குடும்பத்தை நடத்த முடியுமா? என்று மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments (0)
Add Comment