கண்ண திறங்க டாடி.. எந்திரிங்க டாடி.. கதறும் வடிவேல் பாலாஜியின் மகள்.. இதயத்தை நொறுக்கும் வீடியோ!! (வீடியோ, படங்கள்)

சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் மகள் தனது அப்பாவின் உடலை பார்த்து கண்ணை திறங்கள் அப்பா என கதறும் வீடியோ மனதை கனக்கச் செய்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார்.

45 வயதான வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

4 மருத்துவமனைகளுக்கு மாற்றம்

கடுமையான மாரடைப்பை தொடர்ந்து அவரது கைகால்கள் செயலிழந்து போனது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் , அந்த நிலைமையிலும் 4 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டார்.

பெரும் துயரம்

இந்நிலையில் இன்று காலை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரங்கல்

அறுவை சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் வறுமையில் இருந்துள்ளார் வடிவேல் பாலாஜி. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டில் அஞ்சலி

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துபட் எம்எஸ் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கண்ண திறங்க டாடி

அப்போது அவரது மனைவியும் மகளும் கதறி அழுதனர். குறிப்பாக அவரது மகள் டாடி எந்திரிங்க டாடி என்றும் கண்ண திறங்க டாடி என்றும் கதறியது அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

கனத்துப்போன இதயம்

வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருந்த ஃபிரீஸர் பாக்ஸை தட்டி தட்டி தனது அப்பாவை எழுப்ப முயன்றார் அந்த விவரம் அறியா மகள். அந்த காட்சிகள் பலரின் இதயத்தையும் ஒரு கணம் கனக்கச் செய்துவிட்டது. வடிவேல் பாலாஜியின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment