அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதாக வைரலாகும் தகவல்..!

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மீண்டும் திறப்பது பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், இந்தியாவில் தியேட்டர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

இந்தியாவில் சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மீண்டும் தியேட்டர்களை திறப்பது மற்றும் திரையிடலின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என வைரல் பதிவுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்தியாவில் தியேட்டர்களை திறப்பது பற்றி மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், வைரல் தகவல் உண்மையென நம்பி பலர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தியேட்டர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படுவதாக வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Comments (0)
Add Comment